3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பழங்கால வானியல் ஆய்வு மையம்
கி.மு 5ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கிரகங்களின் அமைப்பை விளக்கும் வரைபடம் ஆய்வில் ஈடுபட்டுள்ள கொரிய நாட்டுக் குழு அந்தக் கற்களைச் சுற்றி வேளாண்மை நடைபெற்று வருகிறது http://www.bbc.com/tamil/india-42584408 6 ஜனவரி 2018 ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில எல்லையில் அமைந்திருக்கும், ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் வடிவங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, வானியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முடுமால் எனும் அந்த கிராமத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த இடத்தில 12 முதல் 14 அடி உயரமுள்ள 80 கற்கள் நடப்பட்ட நிலையில் உள்ளன. அங்கு சுமார் 3,500 சிறிய கற்களும் காணப்படுகின்றன. அது பேய்கள் நிறைந்துள்ள இடம் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வானியல் ஆராய்ச்சி மையமாக இருந்த இடம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நேரம் மற்றும் பருவ காலத்தை அறிய பயன்பட்ட ...