The ghosts of Adichanallur
ஆதிச்சநல்லூரின் உயிர்கள்…!
எம்.கல்யாணராமன்
(நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் (13.01.2018)
தமிழில் : ர. சிபி நந்தன், இரண்டாம் ஆண்டு தொடர்பியல் துறை மாணவன், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்)
அவளது உடலமைப்பு நன்கு வடிவமைக்கப்பட்டதாய் இல்லை, ஆயினும் அவளது உடல் எதையோ உருவகப்படுத்தியது. பாவாடை போலவோ ஒட்டியாணம் போலவோ தோற்றமளிக்கும் ஒன்று அவளது பெரிய இடையை எடுத்துக்காட்டிற்று. அவள் காதுகளில் தொங்கிக்கொண்டிருந்த நீண்ட காதணி, திருநெல்வேலிப்பகுதிக்கே உரித்தானதாய்த் தோன்றியது.
உள்ளங்கையளவுள்ள இந்த செப்பு உருவம் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தில் ஒரு அகழ்வாய்வுத் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது என்கிறார் அருங்காட்சியகத் துறையில் மானுடவியலின் பொறுப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.மகேஸ்வரன். “இது வளமைக்கான தாய்க்கடவுளைக் குறிப்பதாய்த்தான் இருக்கும்” என்கிறார் அவர். “இவை ஆதிமனிதனின் கைவினைப் பொருட்கள்; கி.மு.1500ஐ சார்ந்தது” என்கிறார் இந்திய தொல்லியல் துறையின் சத்தியமூர்த்தி. தொல்லியல் மேற்பார்வையாளராக, 2004-05ல் நடந்த ஆதிச்சநல்லூரின் நான்காவது (சில ஆவணங்களின் படி 5ஆவது) அகழ்வாய்வுக்கு இவர் தலைமை தாங்கினார்.
கிட்டத்தட்ட ஒரு நூறு ஆண்டாக இந்தத் தாய்க்கடவுள் எழும்பூர் அருங்காட்சியகத்தின் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தாள். தற்போது இந்த பொம்மை உருவமும், வேறு பல கைவினைப்பொருட்களும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட மற்ற கைவினைப்பொருட்களோடு சமீபத்தில் புனரமைக்கப்பட்ட காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அருங்காட்சியகத் துறையின் இயக்குனர் கவிதா ராமு கூறுகிறார்.
சங்க காலத்தை அகழ்தல்
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுத் தளத்தில் பழம்பெருமையின் எந்தச் சின்னமும் இல்லை. அண்மையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில், தாமிரபரணிக்குள் சூரியன் தன்னை மறைத்துக் கொள்ளும் வேளையில், ஆற்றங்கரையில் உள்ள புல் மண்டிய மண்மேடு கால்நடைகளின் மேய்ச்சல்த்தளமாக மாறிவிட்டிருக்கிறது. திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலை குறுக்கே ஓட தொல்லியல் துறையின் இரண்டு துருப்பிடித்த பலகைகள் அந்த இடத்தைப் பற்றிய சொற்பமான தகவல்களைக் கூறியும், சிதைப்பவர்களை எச்சரித்தவாறும் நிற்கின்றன.
“மேட்டிற்கு மேல் ஏறினால் பார்க்கலாம்” என்றனர் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள்.
அகழ்வாய்வு குறித்துப் பரிச்சயம் இல்லாத கண்களுக்கு அந்த குன்றில் அதிசயமாக ஒன்றும் தெரியாது, ஓரிரு புதிதாய் முளைத்த கோவில்களைத் தவிர. ஆனால் இதே இடத்தில் தான் ஒரு ஜெர்மானியர், ஒரு பிரெஞ்சுக்காரர், பின்பு ஆங்கிலேயர்கள் இறுதியாக இந்தியர்கள் என்று நால்வர் நடத்திய அகழ்வாய்வுகளில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் எலும்புகள், தங்க ஆபரணங்கள், ஆயுதங்கள், உலோக கைவினைப் பொருட்களோடு நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தொல்பொருட்கள் சென்னை, கொல்கத்தா, பெர்லின் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அண்மையில் ஆதிச்சநல்லூரில் கட்டி முடிக்கப்பட்ட அருங்காட்சியகக் கட்டடம் இத்தொல்பொருட்களின் வரவுக்காக காத்திருக்கின்றன.
சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு நாகரிகக் குடியிருப்பு, சிவகங்கை மாவட்டத்தின் மதுரை எல்லையில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதை ஒட்டி தமிழ் ஆர்வலர்கள், பண்பாட்டுக் காதலர்கள், திராவிடக் கருத்தியல்வாதிகள் ஆகியோர் மத்தியில் ஆதிச்சநல்லூர் பற்றிய ஆர்வம் பெருகியுள்ளது. வேதகால இந்து சமயத்திற்கு அந்நியப்பட்ட புராதன தமிழ் நாகரிகத்தின் இருப்பை நிரூபிக்கக் கூடும் என அஞ்சி நடுவண் அரசும் தொல்லியல் துறையும் அகழ்வாய்வை நிறுத்தியதாக இவர்களுள் பலர் குற்றம் சாட்டினர்.
சங்க இலக்கியம் திராவிட நாகரிகத்தின் உரைகல்லாகவே இருந்து வந்துள்ளது. சங்கக் கவிதைகள் அக உணர்வுகளையும் புறச் செயல்பாடுகளையும் தூண்டுவதாய் இருக்கின்றனவே ஒழிய கடவுள் பற்றியோ வழிபாட்டு முறைகள் பற்றியோ பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறன. பல அறிஞர்கள் வேதகால சனாதன மதத்தின் எந்த தடயமும் சங்க இலக்கியங்களில் இல்லை என்றும், சாதிய முறைகள் பற்றியோ பிராமணர்கள் பற்றியோ கிட்டத்தட்ட ஒன்றும் இல்லை என்றும் நிரூபிக்கிறார்கள். ஆதிச்சங்க காலம் பிராமணியமற்ற, சாதியற்ற சமூகமாகவும் தங்களுக்கென தனி அடையாளம் அளிப்பதாகவும் திராவிடம் கருதுகின்றது. “வெறும் ஒரு இடுகாடு மட்டுமே இவ்வளவு தெரியப்படுத்துகிறது என்றால் ஆதிச்சநல்லூரில் ஒரு முழுமையான அகழ்வாய்வு எவ்வளவு தெரியப்படுத்தும் என்று எண்ணிப் பாருங்கள்” என்கிறார் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதிப் பணியின் இயக்குநராகப் பணியாற்றிய மதிவாணன்.
எலும்புகள் என்ன சொல்கின்றன?
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தற்காலத் தமிழர்களின் உடலியல் அமைப்பை ஒத்ததாக இல்லை. உதாரணமாக, கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளின் தாடைகள் நீண்டு ஆஸ்த்ரேலியப் பழங்குடிகளையோ கருப்பு ஆப்பிரிக்கர்களையோ ஒத்ததாக இருக்கிறன. கண் குழிகளின் (eye socket) வடிவமோ அளவோ காகசாய்டு (Caucasoid) இனத்தையோ, தூரக்கிழக்கு இனத்தையோ, ஆப்பிரிக்க இனத்தையோ போல இருக்கின்றன. உள் அழுந்திய நெற்றியும் கூட அந்நிய தோற்றத்தின் குறியாக இருக்கிறது.
பல பத்தாண்டுகளாக ஆய்வாளர்கள் இத்தளம் 3000 முதல் 4000 ஆண்டுகள் பழமையானது என்று கருதினர். மேலும் இந்த மண்டை ஓடுகள் இன்றைய தமிழர்களின் மூதாதையர்களான பூர்வகுடிகளுடையது என்ற முடிவுக்கு வந்திருந்தனர். சில அறிஞர்களால் பூர்வ திராவிட சமூகமாகக் கருதப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தோடு ஆதிச்சநல்லூரை இணைக்க முற்பட்டனர் வேறு சிலர். ஆதிச்சநல்லூரை காலத்தால் அறுந்து போன சிந்து சமவெளிக்கும் தமிழுக்குமான இணைப்பாகப் பார்த்தார்கள் இவர்கள்.
ஆனால் மிகவும் சமீபத்திய ஆய்வொன்றில் ராகவன் என்ற உடற்கூறு மானுடவியலாளர் இந்த எச்சங்களின் காலம் கிபி 500ல் இருந்து 200க்கு உட்பட்டது என ஆதாரங்களுடன் ஊகிக்கிறார். இந்த சமயத்தில் தற்காலத் தமிழர்கள் உருவாகியிருந்தனர். அந்நியமானதாகத் தோன்றும் எலும்புக்கூடுகள் உண்மையில் அந்நியர்களுடையது தான் என முடிவுக்கு வந்துள்ளார் அவர்.
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதிச்சநல்லூரில் இந்த அந்நியர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்?
பழமையோடு ஒரு பந்தம்
ஆதிச்சநல்லூரில் நடந்த மிகச் சமீபத்திய அகழ்வாய்வான 2004-05 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தியின் தலைமையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு இரும்புக் காலத்தைச் சேர்ந்த பிணங்கள் புதைக்கும் இடம் மட்டுமல்ல- பண்டைய மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடமாகவும் இருந்திருக்கிறது என்பதைக் காட்டியது. தி இந்து (The Hindu) மற்றும் பிரண்ட்லைன் (Frontline) இதழ்களில் அப்போது வெளிவந்த கட்டுரைகளில் பத்திரிகையாளர் டி.எஸ். சுப்பிரமணியன் அந்த அகழ்வாய்வில் என்னென்ன கண்டெடுக்கப்பட்டன என்பதை விரிவாக எழுதியுள்ளார்.
ஆதிச்சநல்லூர் முன்பு உலோகப்பணிகள் செய்யுமிடமாகவும் சுரங்கமாகவும் இருந்துள்ளது என 2010இல் இண்டியன் ஜர்னல் ஆப் ஹிஸ்டரி ஆப் சயின்ஸ் ( Indian Journal of History of Science) என்னும் ஆய்வேட்டில் பதிப்பான ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. செப்புக் கலைப்பொருட்கள் கொண்ட ஒரு புதையல் தாழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கனிம மாதிரி கிபி 1500ஐச் (700 ஆண்டுகள் ஏறக்குறைய) சேர்ந்தது என மணிப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜ் கிஷோர் கார்டியா கணித்துள்ளார்.
“ஆதிச்சநல்லூரில் ஆர்செனிக் (arsenic) எனும் உலோகம் செப்போடு கலக்கப்பட்டு பல வெப்பநிலைகளைத் தாங்கும் வலுவூட்டப்பட்ட, நெகிழ்வுத் தன்மையை இழந்து விடாத உலோகக் கலவையாக செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பூர்வகுடிகளுள் இந்த செய்முறை ஆதிச்சநல்லூரை அடுத்து சிந்துச் சமவெளியில் மட்டுமே காணப்பட்டுள்ளது,” என்கிறார் இந்திய கடலியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி பி.சசிசேகரன். ஆதிச்சநல்லூருக்கு அருகாமையில் உள்ள கிருஷ்ணாபுரத்திலும் ஒரு பண்டைய சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இந்த உலோகப்பணி தனித்து செய்யப்பட்டதல்ல என்பதை நிரூபிப்பதாகக் கூறுகிறார். இங்கு கிபி 8ஆம் நூற்றாண்டு வரை உலோகப் பொருட்கள் செய்யப்பட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள காலத்தைக் கண்டறியும் முறை விமர்சிக்கப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தெர்மோ லூமினெசென்ஸ் (Thermo Luminescence – TL) மற்றும் ஆப்டிக்கல்லி ஸ்டிடிமுலேட்டெடு லூமிஎனசென்ஸ் (Optically Stimulated Luminescence – OSL) dating முறைகள் இறுதியாக கனிமம் எப்போது சூடேற்றப்பட்டுள்ளது (பெரும்பாலும் ஒரு பொருள் உருவாக்கப்படும் பொழுது) என்பதைக் கண்டுபிடிக்கிறது. விமர்சகர்கள் ஆதிச்சநல்லூருக்கு கார்பன் டேட்டிங் (carbon dating) முறையே உகந்தது எனக் கூறுகின்றனர்.
கனிமங்களின் காலத்தைக் கணிக்க ஓஎஸ்எல் (OSL) முறையே பொருந்தும்; உயிர்மப் பொருட்களின் காலத்தைக் கணிக்க கார்பன் டேட்டிங் முறையே பெரிதும் பயன்படும் என்கின்றனர். மேலும் ஓஎஸ்எல் (OSL) கடல் அகழ்வாராய்ச்சியாளர்களால் ‘கம்பட்’ வளைகுடாவில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலத்தை வெற்றிகரமாக கணித்துள்ளது. ஆனால் சில தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களில் செய்யப்படும் ரேடியோ கார்பன் டேட்டிங் (radio carbon dating) சர்ச்சையைத் தீர்ப்பதோடு OSL முறையை விடத் துல்லியமான விடையையும் அளிக்கும் என்கிறனர்.
எச்சங்களின் பன்மைத்தன்மை
சில காலமாக, பல்வேறு கோட்பாடுகளின் விவாதக் களமாக ஆதிச்சநல்லூர் இருந்து வருகிறது. இந்த கோட்பாடுகள் இந்திய வரலாற்றைப் பற்றி மட்டுமல்ல; மனித குல வரலாற்றைப் பற்றிய பெரும் கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிப்பனவாக உள்ளன.
அன்றைய மெட்ராஸ் தொடங்கி கொல்கத்தா, பெர்லின், பாரீஸ், லண்டன், கார்னெல் பல்கலைக்கழகத்தின் இருப்பிடமான நியூயார்க் மாகாணத்தின் இடாகா ஆகிய இடங்களில் உள்ள சிறந்த மூளைகளை வேலைவாங்கி இருக்கிறது ஆதிச்சநல்லூரின் கண்டுபிடிப்புகள்.
“ஆதித்தநல்லார் (ஆதிச்சநல்லூர்) எலும்புக் கூடுகளின் தரவுகள் ‘இன வரைவியல்’ (racial paleontology) என்னும் மானுடவியல் பிரிவின் கருத்துக்களின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள பல கோட்பாடுகளின் அடித்தளமாகக் கருதப்படுகிறது” என்று கென்னத் கென்னடி என்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் எழுதிய ‘1986ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட “Hauntings at Adichanallur: an anthropological ghost story” ‘‘ஆதிச்ச நல்லூரின் துரத்தல்கள், ஒரு மானுடவியல் பிசாசுக்கதை’’என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிச்சநல்லூரும் பிரெட்ரிக் ஜாகரும்
ஆதிச்சநல்லூரின் அந்நியத் தொடர்புகள், பெர்லின் நகரைச் சேர்ந்த ரஷ்யப் பின்னணி கொண்ட ஜெர்மானியப் பழம்பொருள் சேகரிப்பாளரான பிரெட்ரிக் ஜாகர் (Friedrich Jagor) என்பவரிடம் இருந்து 18ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது. ஜாகரின் காலத்தில் ஜெர்மனி காலனிய ஆதிக்கப் போட்டியில் காலம் தாழ்ந்து கலந்துகொண்டாலும் தனக்கான வாய்ப்புக்களுக்காக ஏங்கியது. ஜெர்மானியர்கள் இனவியல் (ethnography) மூலமாக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் அவர்கள் பார்த்த பூர்வகுடிகளைப் புரிந்து கொள்ள எண்ணினார்கள். இது ஜெர்மன் நகரங்கள் தங்களை பல் இனத்தன்மை (cosmopolitan status) கொண்டவர்களாக நிலைநாட்டுவதில் ஊக்கம் கொண்டு தங்களது அருங்காட்சியகங்களில் உள்ள இனவியல் சேகரிப்புகளைச் செழுமைப்படுத்தி ஐரோப்பாவின் பல நகரங்களோடு போட்டி போட்டன. பெர்லின் நகரத்துக்காரரான ஜாகர் இப்போட்டியில் பெரும் பங்காற்றினார்.
1856 முதல் 1893 வரை, ஜாகர் ஆசியாவிற்கு மூன்று முறை பயணம் செய்தார். 1876இல் இரண்டாம் முறையாக அவர் பயணம் மேற்கொண்ட போது அவர், “ஐம்பது வகைப்பட்ட பொருட்கள், மட்பாண்டங்கள், அனைத்து அளவிலும் வடிவத்திலுமான கலன்கள், இரும்பு ஆயுதங்கள் மற்றும் பயன்படு பொருட்கள், அதிக அளவிலான மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள்” போன்றவற்றைக் கண்டெடுத்ததாக மாவட்ட அரசிதழாளர் எழுதியுள்ளார். இவற்றை எல்லாம் ஜாகர், பெர்லின் இனவியல் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்றார்.
ஜாகர் தனது பயணங்கள் பற்றிய விரிவான குறிப்புகளை, ஆதிச்சநல்லூர் தவிர்த்து, எழுதியுள்ளார். “ஏறத்தாழ 10,000 பொருட்களை ஜாகர் திருப்பிக் கொண்டுவந்தார். இவற்றுள் இந்தியத் தொல்பொருட்கள் முதலில் இனவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன, பின்னர் 1963இல் புதிதாகத் துவங்கப்பட்ட இந்திய கலைத் துறைக்கு மாற்றப்பட்டன. இத்துறை இப்போது ஆசியக் கலைகளின் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக உள்ளது” என்கிறார் பெர்லின் இனவியல் அருங்காட்சியகத்தில் தெற்கு/ தென்கிழக்கு ஆசியாவின் பொறுப்பாளரான ரோலண்ட் பால்ட்ஸ்.
ஜாகர், ஆதிச்சநல்லூர் பற்றி எழுதாவிட்டாலும் அவர் கண்டெடுத்த புதையல்கள் ஐரோப்பா முழுதும் தெரியவர ஆரம்பித்தன என்கிறார் கென்னடி. இனக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட லூயி லாப்பிக்யூ (Louis Lapicque) என்னும் பிரெஞ்சு நரம்பியல் விஞ்ஞானி 1903இல் ஆதிச்சநல்லூர் வந்து சேர்ந்தார். லாப்பிக்யூ கண்டெடுத்த ஒரு மண்டை ஓட்டை ஆதி நீக்ராய்டு (Negroid) இனத்தைச் சேர்ந்ததாகக் கருதினார் என்கிறார் கென்னடி. இது பாரீசின் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் “பெருமையுடன்” காட்சிப்படுத்தப்பட்டது என்றும் அக்காலத்தின் பல மேதைகள் இதனை ஆராய்ந்ததாகவும் கென்னடி கூறுகிறார்.
இதே நேரம் இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரே (Alexander Rea) என்பவர் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனது அகழ்வாய்வைத் தொடங்கினார். அவர் கண்டெடுத்த 14 எலும்புக்கூடுகளும் வேறு பல தொல்பொருட்களும் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
திராவிடர்களின் முன்னோடிகள்?
1930இல், சாலி சக்கர்மேன் (Solly Zuckerman) என்னும் உடல் பகுப்பாய்வாளர் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகளை அளவீட்டடிப்படையில் ஆய்வு செய்தார். முதலாவது ஆஸ்ட்ரலாய்டு இனத்தை ஒத்ததாக இருப்பினும் திராவிட இனத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாய் இருக்கவில்லை. இரண்டாவது ஒரு பெண்ணினதைப் போன்றதும், ‘கிரிமால்டியின் கிழவி’யோடு (Old Woman of Grimaldi என்பது அந்த மண்டை ஓட்டின் பெயர்), இத்தாலியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கற்கால எலும்புக்கூடுகளுள் ஒன்று, அபாரமான ஒற்றுமைகளைக் கொண்டும் உள்ளது என்கிறார்.
கிரிமால்டியின் (‘கிழவியின்’ மண்டை ஓடு) கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில் மறுக்கப்பட்டுவிட்ட ‘ஐரோப்பாவுக்கு வெளியே’ (Out of Europe) எனக் குறிப்பிடப்படும் கோட்பாடுகளுக்குச் சான்றாய்க் கருதப்பட்டன. கிரிமால்டிகள் பின்னாட்களில் கருப்பின ஆப்பிரிக்கர்களுக்கு முன்னோடிகளான கருப்பின ஐரோப்பியர்களுக்குச் சான்றுகளாகக் கருதப்பட்டன. சக்கர்மேன், இவைகள் திராவிடர்களுக்கு முன்னோடிகளாக இருந்திருக்கக் கூடும் என்றும் கருதியிருக்கலாம்.
1963இல் இந்திய மானுடவியலாளர்களான பி.கே. குப்தாவும் பி. சாட்டர்ஜீயும் நவீன எலும்பியல் ஆய்வு முறைகள் மூலம் செய்த ஆய்வு இவ்வெலும்புகள் வேடாய்டு (Veddoid), ஆஸ்ட்ரலாய்டு(Australoid), மெடிட்டரேனியன் (Mediterranean) இனங்களினுடைய கூறுகளின் கலவையாக இருப்பதைக் காட்டியது. மேலும் இந்த இனங்கள் திராவிடம் பேசுபவர்களின் உருவாக்கத்துக்கு பங்காற்றின என்றும் கூறுகிறார்கள்.
வேடர் (Vedda) என்னும் இனக்குழு இலங்கையில் இன்றும் காணப்படுகிறது. தமிழில் வேடர் என்பது வேட்டைக் குழுக்களைக் குறிக்கும். முருகன் இவ்வினக்குழுவில் இருந்து வந்ததாக நாட்டார் கதைகள் கூறுகின்றன.
ஆஸ்ட்ரலாய்டு மற்றும் மெடிட்டரேனியன் எலும்புகள் சிந்து சமவெளியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவதன் மூலம் ஆதிச்சநல்லூருக்கும் சிந்து சமவெளிக்கும் இணைப்பை உருவாக்குகிறனர் இவ்விரு இந்திய ஆய்வாளர்கள்.
இவற்றை எல்லாம் ஆய்வுக்குள்ளாக்கும் கென்னடி, தமது கட்டுரையில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் வெவ்வேறு இனத்தவை என்னும் முடிவுக்கு வருகிறார். இதன் அடிப்படையில் அவர் அங்கு அகழ்வாய்வையும் ஆய்வையும் முழுமையாக முடித்து ஆதிச்சநல்லூரின் ‘பேய்களை’ ஆற்றுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்.
ஆஸ்திரேலியா இணைப்பு
2014இல் மனிதனின் தோற்றம் குறித்த ‘ஆப்பிரிக்காவிற்கு வெளியே’ (Out of Africa) எனும் கோட்பாடு அறிவியல்ப் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. ஆஸ்திரேலியர்கள் தங்களது நாட்டின் பூர்வகுடிகள், பனிக்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் குடியேறிய ‘ஆப்பிரிக்காவிற்கு வெளியே’ இனக்குழுவின் சந்ததியர் என்று நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். ஆஸ்ட்ரலாய்டுகள் ஆஸ்த்ரேலியாவை நோக்கி நீர் வழியாகவும் நிலம் வழியாகவும் சென்றதாகக் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இந்தியத் தமிழர்களுக்குப் பிறந்து இனப் போராட்டத்தின் காரணமாக 1970களில் நாட்டை விட்டு வெளியேறிய பி.ராகவன், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளுள் ஒருவர். அவரும் அவரது தங்கை காயத்ரி பத்மநாபனும் சண்டிகரில் குடியேறி ஆய்வாளர்களாகப் பணியாற்றினர். ராகவன் பின்னர் ஆஸ்த்ரேலியாவில் குடியேறினார்.
2004இல் டிசம்பர் மாதம் ஆஸத்ரேலியப் பூர்வகுடிகளுக்கும் தென்இந்தியாவுக்குமான தொடர்பை ஆய்வு செய்ய ராகவன் சென்னைக்குப் பயணமானார். அப்போது அவரது பணியைப் பற்றி அறிந்து விடுதியின் வரவேற்பாளர், ஆதிச்சநல்லூரில் பழைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகச் சொன்னார். “அன்றிலிருந்து ஆதிச்சநல்லூர் என்னோடு ஒன்றிவிட்டது…” என்கிறார் ராகவன்.
கொற்கை என்றொரு துறைமுகம்
அவருக்கு முந்தைய மானுடவியலாளர்கள் ஆதிச்சநல்லூரைத் தனித்துப் பார்த்தனர். இவர், தனது தங்கையின் உதவியுடன், ஆதிச்சநல்லூருக்கு 15 கிமீ தொலைவில் உள்ள கொற்கையின் பின்னணியில் பார்த்தார். சங்க இலக்கியங்களில் கொற்கை துறைமுகமாகவும் முத்துக்குளிக்கும் இடமாகவும் கூறப்பட்டுள்ளது. கார்பன் டேட்டிங் (Carbon Dating) முறையின் மூலம் கொற்கையின் காலம் ஏறத்தாழ கிமு 800 என கணிக்கப்பட்டுள்ளது. கடல் அப்போது 6 முதல் 7 கிமீ தூரம் நிலத்தில் ஏறி இருந்திருக்கக் கூடும் என்கிறார்.
நவீன மென்பொருட்கள், தகவல்தளங்களைப் பயன்படுத்தியும் படிமங்களை ஆராய்ந்தும் இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் அந்நிய வேர்களை உறுதி செய்கிறார் ராகவன். இவை கிமு 2500-2200 க்கு உட்பட்ட காலத்தினது என்கிறார். “ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் பல மத்திய கிழக்கு, மத்தியத் தரைக்கடல் பகுதி, தென்கிழக்காசியா, தூரக்கிழக்கு (தற்கால சீனா, வியட்நாம், கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகள்) போன்ற பகுதிகளைச் சேர்ந்ததாகவும் உள்ளன. அவற்றுள் பல கடல்பயணிகள் மற்றும் முத்துக்குளிப்பவர்களிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு, இயல்பின்மைகளைக் கொண்டதாய் இருக்கின்றன என்கிறார். இவர்கள் பட்டுப் பாதை (silk route) வழியாக வந்தவர்களாக இருக்கக்கூடும், மேலும் இந்த இடம் அந்நியர்களுக்கான கல்லறையாக இருக்கக்கூடும் என்கிறார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் இந்த வரலாற்றின் கடல் வணிகப்பகுதியை முன்நிறுத்த முற்படுகிறது. “புதுப்பிக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் காட்சிக்கூடம் பார்வையாளர்களுக்கு பண்டைத் தமிழரின் வாழ்வியல் முறையும் கடல் பயணங்கள் பற்றியும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு எடுத்துச் சொல்லும்,” என்கிறார் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.
“மாநில அரசு ஆதிச்சநல்லூர் காட்சிக்கூடத்தின் புத்துருவாக்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. இப்பணிகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நிறைவடையும்,” என்கிறார் அருங்காட்சியகத்துறையைச் சேர்ந்த கவிதா ராமு.
கண்டெடுக்கப்பட்ட 170 எலும்புக்கூடுகளுள் 35% காகசாய்டு இனத்தினதும், 30% மங்கலாய்டு இனத்தினதும், 14% நீக்ராய்டு இனத்தினதும், 5% ஆஸ்ட்ரலாய்டு இனத்தினதும், 8% திராவிட இனத்தினதும், 8% கலப்புக் கூறுகள் உடையதும் ஆகும் என்கிறார் ராகவன். ஆஸ்ட்ரலாய்டுகள் பெரும்பாலும் கடலோடும் பழக்கம் (கடல் பயணங்கள் மேற்கொள்ளுதல்) கொண்ட தற்கால ஆஸ்த்ரேலியப் பழங்குடிகளாக இருக்கக்கூடும் என்கிறார்.
நவீன மானுடவியலாளர்கள் வரலாற்றைக் கட்டமைப்பதைத் தாண்டி வேறு எங்கும் இனத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை கண்டு முகம் சுளிக்கின்றனர். தற்போதைய நம்பிக்கையின் படி உலகில் மொத்தம் நான்கு இனங்கள்: ஆஸ்ட்ரலாய்டு, நீக்ராய்டு, காகசாய்டு, மங்கலாய்டு. இவை வெறும் புள்ளியியல் கட்டமைப்புகளே. கலாச்சாரத்தையோ, நடவடிக்கைகளையோ, ஆற்றலையோ குறிப்பவை அல்ல. எவரும் எந்த ஒரு இனத்தை மட்டுமே சார்ந்தவர் அல்ல; இனக்கட்டமைப்பு ஒரு மூடப்பட்ட மரபணு அமைப்பு கிடையாது.
“எப்படிப் பார்த்தாலும் இந்தியா இந்த நான்கு இனங்களின் கலவையே. கலவையின் விகிதம் இடத்திற்கு ஏற்ப மாறுபடும்,” என்று கூறுவதோடு ஆரியம் திராவிடம் என்பது மொழி அடிப்படையிலான கூறுகளே ஒழிய இன அடிப்படையிலானவை அல்ல என்றும் கூறுகிறார், ஆய்வாளர் ராகவன்.
ஆனால் திராவிடம் பேசுபவர்கள், சாதி அடிப்படையிலான பேதமும் மேல் சாதியிடம் குவிக்கப்பட்ட அதிகாரமும் இருக்கும் வரை இனம் மற்றும் அடையாளத்தின் அடிப்படையிலான அதிகாரமுறும் (empowering) அரசியல் தேவை என்கிறார்கள்.
சாதிகளை மீறிய திருமணங்கள் சகஜமாகும் பொழுது இது போன்ற அரசியலின் தேவை இருக்காது என்கிறார்கள். ஒரு விரிவான அகழ்வாய்வு பண்டைய தமிழ்ச் சமூகத்தின் சிறப்புகளை வெளிக்கொண்டு வரும் என்றும் நம்புகிறார்கள். “10% க்கும் குறைவான பகுதியே அகழ்ந்தாயப்பட்டுள்ளது. மேலும் அகழ்தலுக்கும், ஆய்தலுக்குமான இடம் நிறையவே உள்ளது” என்கிறார் ஆய்வாளர் சத்தியமூர்த்தி.
ராகவனின் கண்டுபிடிப்புகள் ஒரு கோணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. பெர்லின் நகரைப் பல்லினத்தன்மையதாக்கும் என எண்ணி பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஆதி மக்களின் எச்சங்களைத்தேடி வந்த பிரெட்ரிக் ஜாகருக்குத் தெரியாது அவர் தோண்டிக் கொண்டிருந்தது ஒரு பல்லின மக்களின் சமாதியாகவோ, வாழ்விடமாகவோ இருந்திருக்கக் கூடும் என்று…!

The Hindu OPINION
January 13, 2018 00:00 IST
Adichanallur in southern Tamil Nadu has been an active playground of archaeologists and anthropologists for more than 150 years. M. Kalyanaraman reports on the possible implications of recent research on skeletal remains and artefacts that suggest an ancient Tamil civilisation of great sophistication and antiquity
Her features weren’t well defined but her body conveyed a symbolism. Her large hips were emphasised by what appeared to be a skirt or perhaps an oddiyanam — a belt-like jewellery. The long, dangling earrings she wore seemed typical of the Tirunelveli region of Tamil Nadu.
The palm-sized bronze figurine came from the archaeological site at Adichanallur, located along the Tamirabarani river in Thoothukudi district, says C. Maheswaran, the retired curator for anthropology at the Department of Museums. “It likely represents a mother goddess who stood for fertility,” he adds. “The artefact is primitive but is circa 1,500 BC,” surmises T. Satyamurthy. As superintending archaeologist at the Archaeological Survey of India (ASI), he had led the fourth excavation — fifth, as per some records — in Adichanallur in 2004-05.
For nearly a hundred years, the Mother Goddess has been lying safely inside a vault at the Egmore Museum. Now the figurine, as well as other artefacts, including gold diadems (gold jewellery tied with a string on the forehead) will join hundreds of other Adichanallur artefacts for display at a revamped gallery in the museum, says Kavitha Ramu, Director, Department of Museums.
Digging to the Sangam era
At the site in Adichanallur, there is little, if any, sign of past grandeur. On a recent Sunday evening, as the sun set over the Tamirabarani river, the grassy knoll on the river bank became a grazing ground for cattle. Bisected by the Tirunelveli-Tiruchendur road, two rusty signboards of the ASI give little information on the significance of the site but warn vandals of punishment.
A group of women waiting for the bus motioned to this correspondent. One of them said in Tamil, “If you climb up the mound, you will see what you are searching for.” To the untrained eye, there is nothing extraordinary on top of the hummock, except for a view of two temples of recent origin. But right here, the four excavations in Adichanallur — by a German, a Frenchman, the British, and finally by Indians — have unearthed hundreds of burial urns, most likely several thousands of years old, along with skeletal remains and thousands of iron and bronze artefacts, including weapons and gold jewellery. These remains were shipped to Chennai, Kolkata, Berlin and Paris. A recently constructed building for an on-site museum in Adichanallur waits for the remains to return.
Among Tamil enthusiasts, heritage lovers, and advocates of Dravidian ideology, there has been a resurgence of interest in Adichanallur, following the recent discovery of an urban settlement in Keezhadi, in Sivaganga district, dating back to the Sangam era (300 BC to 300 AD). Many of them have charged the Centre with wilfully stalling the excavations at Keezhadi, contending that the ASI was baulking at the prospect of digging out an extensive, ancient Tamil civilisation that was independent of Vedic Hinduism.
Sangam literature has been a touchstone for the Dravidian movement. The poetry of the Sangam canon evokes the inner world of feelings and the outer world of activity, but is largely silent on religious practices or even God. Many scholars aver that there is no trace of Vedic Hinduism in the verses, and almost nothing of the caste system or Brahmins. To many proponents of the Dravidian movement, the early Sangam era represents an ideal non-Brahmin, non-caste past, and gives them their separate identity. “If just the burial site can throw up so many things, imagine what a full-fledged excavation in Adichanallur might unearth,” says R. Mathivanan, who served as the Director the State government’s Tamil Etymological Dictionary project.
The skeletal remains excavated at Adichanallur also did not quite match the biological structure of the contemporary Tamil people. For instance, the jaws of many of the skulls were protruding, and appeared to match those of Australian aborigines or Black Africans rather than a typical Tamil or south Indian. The shape and size of the eye sockets resembled those of the Caucasoid, Far Eastern or even African races. A receding forehead was yet another indicator of foreign origins.
For many decades, experts assumed that the site was 3,000 to 4,000 years old, and had concluded that the skulls belonged to primitive races that were the ancestors of today’s Tamils. Some sought to link them to the people of the Indus Valley, which has been recognised by some scholars as proto-Dravidian. Adichanallur was the missing link in time between the Tamils and the Indus Valley people, they felt.
But in the most recent research, P. Raghavan, a physical anthropologist, has surmised that the remains belong to the 500 BC to 200 BC period, by which time the contemporary Tamil population had formed. He has concluded that the foreign-looking skeletal remains were indeed those of foreigners. But what were these foreigners doing in Adichanallur thousands of years ago?
Date with the past
The most recent Adichanallur excavations in 2004-05, led by Mr. Satyamurthy, showed that Adichanallur, besides being an Iron Age burial site, was also a ‘habitation site’ where ancient people lived. In several reports in The Hindu and Frontline published at that time, journalist T.S. Subramanian explained what was excavated during that dig.
A research paper published in 2010 in the Indian Journal of History of Science said that Adichanallur was also an ancient centre for mining and metalwork. A mineral sample from a burial urn containing copper artefacts was dated to 1,500 BC, plus or minus 700 years, by Raj Kishore Gartia of Manipur University.
“At Adichanallur, arsenic was deliberately added to copper so that the alloy could be work-hardened over a wide range of temperatures without fear of embrittlement. Among the ancients in India, this technique has been found only in the Indus Valley, besides Adichanallur,” says B. Sasisekaran, who was serving as a scientist at the National Institute of Ocean Technology when he did the research as part of the team. He adds that at the nearby Krishnapuram too, an ancient mining site was found, indicating that this was not an isolated activity. The experts concluded that metal artefacts were made here until the 8th century AD.
The dating method used has, however, drawn criticism. In the Thermo-luminescence (TL) and Optically Stimulated Luminescence dating (OSL) methods adopted, the last time the mineral was heated (probably for its manufacture) is detected. Critics say that carbon dating is more appropriate for Adichanallur.
Mr. Sasisekaran counters that OSL is indeed the standard for dating minerals, as carbon dating is used more for organic material. He adds that OSL had successfully dated findings by marine archaeologists at the Gulf of Khambat. But some archaeologists insist that radio carbon dating at three reputed institutes would settle the issue and also reduce the error margin in the OSL dating.
Diversity of the remains
For quite some time now, Adichanallur has been the playground of contentious theories voiced across the world. These theories have dealt with some of the biggest questions concerning the history of not just India but the entire human race.
Starting in Chennai, or Madras, as it was known then, the Adichanallur findings have exercised bright minds in Kolkata, Berlin, Paris, London, Australia and Ithaca in New York State, home to Cornell University.
“Adittanallur (Adichanallur) skeletal data have come to be regarded as the keystone for many theories of race formation, which were based upon the tenets of an earlier anthropological preoccupation called racial paleontology,” said Kenneth Kennedy, former professor of physical anthropology at Cornell, in his essay, “Hauntings at Adichanallur: An anthropological ghost story”, published in 1986.
Adichanallur’s international links began with the arrival of German antiquarian and Berlin resident of Russian descent Friedrich (Fedor) Jagor in the 19th century. Germany during Jagor’s time was a late entrant to the imperialist game that still fancied its chances. The Germans believed that they could use ethnography to understand the native populations they were encountering in Asia and Africa. This resulted in a race among German cities to boost their cosmopolitan status and catch up with other cities on the continent by enhancing the ethnological collections of their museums. Jagor, a resident of Berlin, was a prominent player in this race.
Between 1857 and 1893, Jagor made three trips to Asia. During his second expedition in 1876, he excavated “upwards of fifty kinds, of baked earthenware, utensils of all sizes and shapes, a considerable number of iron weapons and implements… and a great quantity of bones and skulls”, wrote the District Gazetteer. Jagor shipped his finds to the Ethnological Museum of Berlin.
Jagor has left detailed chronicles of his travels, but not of Adichanallur. “Jagor brought back some 10,000 artefacts in all. The Indian artefacts were first stored at the Ethnological Museum and in 1963 were brought to the newly established Department of Indian Art, now a part of the Museum of Asian Art next to the Ethnological Museum,” says Roland Platz, curator for South/Southeast Asia at the Berlin Ethnological Museum.
Jagor may not have written about Adichanallur but his treasures were becoming well known in Europe, noted Kennedy. Louis Lapicque, a French neuroscientist who believed in race theories, landed in Adichanallur in 1903. Kennedy added that Lapicque dug out one skull that, according to Lapicque, constituted evidence of a primitive Negroid race. This skull was “proudly displayed” at the Muséum national d’Histoire naturelle in Paris, according to Kennedy, who noted that many other experts of that time were also weighing in on the skeletal remains.
Meanwhile, Alexander Rea, the superintending archaeologist of the ASI in Madras, had started his own excavation at the turn of the 20th century. In all he excavated 14 skeletal remains, and many of the artefacts he dug out were put on display at the Egmore Museum in Chennai.
In 1930, Solly Zuckerman, a research anatomist, did a measurement-based study of two Adichanallur skulls. He found the first to be somewhat Australoid but didn’t think it was too different from being Dravidian. The second, he said, was likely female, and remarkably similar to the Old Woman of Grimaldi, one of two Stone Age skeletal remains found in Italy.
The Grimaldi finds were thought to support the ‘Out of Europe’ theory which was later discredited. The Grimaldis were supposed to be examples of darker-skinned Europeans who gave rise to Black Africans and, probably for Zuckermann, Dravidians too.
In 1963, Indian anthropologists B.K. Gupta and P. Chatterjee published a study based on more advanced skeletal evaluation techniques in which they said the skeletons showed a medley of “primitive” features that belonged to Veddoid-Australoid and Mediterranean races. These races had “contributed to the formation of Dravidian speakers”, they said.
‘Vedda’ is a tribe that is still found in today’s Sri Lanka. In Tamil, ‘Vedda’ stands for the hunter tribe. As per the folklore, the most popular deity in the State, Murugan, comes from that tribe.
The two Indian anthropologists noted that the Australoid and the Mediterranean skeletal remains had also been found in Indus Valley Civilisation, thus establishing a link with Adichanallur.
Reviewing these studies, Kennedy concluded in his essay that the Adichanallur remains found until then were quite diverse. On that basis, he called for more conclusive excavations and analysis so that the ghosts of Adichanallur could be put to rest.
The Aussie connection
By 2014, the ‘Out of Africa’ theory had become the scientific consensus on the origin of man, and Australia had embarked on a project that would show that the aborigines in that country were descendants of ‘Out of Africa’ migrants living in South and Southeast Asia during the Ice Age. The Australoids had reportedly pushed towards Australia through sea and land routes — apparently, Australia was attached to the mainland then.
Among the scientists working in that project was P. Raghavan, who was born to Indian Tamil parents in Jaffna but left the island nation in the late 1970s due to the ethnic strife there. He and his sister Gayatri Pathmanathan moved to Chandigarh as researchers. Raghavan later moved to Australia.
In December 2004, he was on a visit to Chennai for his research on the link between aborigines and South India. A hotel receptionist, after asking about his profession, informed him that some ancient skeletons had been unearthed at Adichanallur. “Adichanallur became my passion...” says Mr. Raghavan.
While physical anthropologists before him saw Adichanallur in isolation, Mr. Raghavan, assisted by his sister, saw it in the context of Korkai, some 15 km from Adichanallur, and the Sangam references to it as a port involved in sea trade and pearl fishing. Radio carbon dating had found that a sample from Korkai was circa 800 BC. At that time (2,500 years ago) the sea might have been at least 6-7 km inland, he says.
After research using advanced software and databases, and scrutiny of the fossil and semi-fossil records in the area, he testifies to the foreign origin of the people whose skeletal remains were found. He says they date to 2,500-2,200 BC. “Many of the Adichanallur skulls were that of people from the Middle East, the Mediterranean region, Southeast Asia and the Far East, including what is today Vietnam, Cambodia, China and Japan. The skulls had abnormalities and nutritional deficiencies of the kind typically suffered by seafarers and deep-sea divers. They probably came in through the silk trade route, and the burial ground excavated was probably an exclusive cemetery for foreigners,” Mr. Raghavan says.
The Egmore Museum gallery seeks to highlight the sea trade aspect. “The revamped Adichanallur gallery in Egmore Museum will give visitors a feel of ancient Tamil life and their maritime activities through the use of virtual and augmented reality,” says K. Pandiarajan, Tamil Nadu Minister for Tamil Official Language and Tamil Culture.
“The State government has sanctioned Rs. 30 lakh for refurbishing the Adichanallur gallery, which will be completed by March-April,” says Kavitha Ramu of the Department of Museums.
Awaiting closure
Mr. Raghavan says that of the nearly 170 skeletal remains studied, Caucasoid constituted 35%, Mongoloid 30%, Negroid 14%, Australoid 5%, Dravidian 8%, and mixed traits 8%. He says that the Australoid were likely contemporary Australian aborigines who were known to have had seafaring qualities.
Modern anthropologists frown upon any significance being attached to race, save for the purposes of reconstructing history. The present belief is that there are four races: Australoid, Negroid, Caucasoid and Mongoloid. But these are statistical constructs that do not determine or describe culture, behaviour or ability. No one is purely of any race and the races are not closed genetic systems.
“In any case, India is an admixture of all the four races. The extent of the mix may vary from region to region,” says Mr. Raghavan, adding that Dravidian and Aryan are linguistic and not racial entities.
Dravidianists argue that as long as there are caste-based inequalities and concentration of power in the upper castes, empowerment politics based on race and identity are both relevant and necessary.
When marriage across caste boundaries becomes commonplace, such politics won’t be required, they say. They hope that an extensive excavation will conclusively establish a glorious Tamil civilisation. “Less than 10% of the site has been excavated. There is scope for much more work there,” says Mr. Satyamurthy.
Mr. Raghavan’s finding offers closure to at least one aspect, however. Fedor Jagor came looking for the remains of a primitive people to exhibit in a Berlin museum so that the city could present itself as more cosmopolitan. Little would he have known that he was digging up an ancient cosmopolitan cemetery, if not the burial place of an entire cosmopolitan community.

Comments
Post a Comment